ஐதராபாத் :ஆஸ்கர் வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் தங்களுக்கான தொகையை இயக்குநர் வழங்கவில்லை என பொம்மன் - பெள்ளி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர். முதுமலையில் உள்ள யானை பாகன்களின் வாழ்க்கை யதார்த்தங்களை திரைக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றது.
இந்நிலையில், அந்த ஆவணப் படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் ஆகியோர் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளனர். ஆவணப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தங்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், ஆனால் ஆஸ்கார் விருது வென்ற பிறகு முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தங்களது தொலைபேசி அழைப்புகளை இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் எடுக்கவில்லை என்றும், இதுவரை தங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்றும் பொம்மன் - பெள்ளி தெரிவித்து உள்ளனர். மேலும் படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தங்களிடம் வந்து திருமண காட்சியை படமாக்க விரும்புவதாகவும் பணம் இல்லாததால் நீங்கள் செலவு செய்யும்படி கூறியதாக இருவரும் தெரிவித்து உள்ளனர்.