ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனம், 'கௌரவத்துடன் வாழ்வதற்கான தொழிற்பயிற்சி' என்னும் திட்டத்தின் கீழ் குறைந்தது 60 பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளது. இதற்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஒரு வருடத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் நிரஜ் கே பவன் கூறுகையில், "எங்களது இலக்கு 100 பிச்சைக்காரர்களே. இதில் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது" என்றார்.