தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துர்கா பூஜை விடுமுறை...மேற்கு வங்கத்தில் வீட்டில் இருந்தே பணிகளை தொடங்கும் அரசு ஊழியர்கள் - தலைமை செயலாளர் ஹரி கிருஷ்ணா

துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள போதிலும், இன்று முதல் வீட்டில் இருந்தபடியே பணிகளை தொடங்குகின்றனர்.

துர்கா பூஜை விடுமுறை
Bhaதுர்கா பூஜை விடுமுறைrat

By

Published : Oct 7, 2022, 8:04 AM IST

மேற்கு வங்கம் :துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 2 முதல் 11ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரசுப்பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று நோக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் (அக்டோபர் 8)இன்று முதல் வீட்டில் இருந்தபடியே நிர்வாக பணிகளை தொடங்குகின்றனர். அதிகாரிகள் அலுவலகத்திற்கு செல்லாமல் பணிகளை வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் எங்கிருந்தும் ஆன்லைனில் பணிகளை கவனிக்க முடியும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விடுமுறை நாட்களில் அரசு அலுவலகர்கள் பணிபுரிவது அரிதான விஷயம் என்ற நிலையில், மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு அதனை எளிதாக மாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குழந்தையை கடத்திய சாதுக்கள்...தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details