தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவலர்கள் தாக்குதலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: 8 பேர் பணியிடை நீக்கம்! - மனநல நோயாளி உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு மனநல நோயாளி உயிரிழந்த சம்பவத்தில் 8 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தாக்குதலில் மனநல நோயாளி உயிரிழப்பு: 8 காவல் துறையினர் பணியிடை நீக்கம்!
போலீஸ் தாக்குதலில் மனநல நோயாளி உயிரிழப்பு: 8 காவல் துறையினர் பணியிடை நீக்கம்!

By

Published : Jun 13, 2021, 11:31 AM IST

கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை குடியிருப்பு பகுதியில், கையில் கத்தியுடன் சுற்றித் திரிந்ததற்காக ராய் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இதையடுத்து, மூன்று மணி நேரம் காவலில் இருந்த பின்னர் அவரை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் காணப்பட்ட அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தார் காவல் துறையினரின் தாக்குதலால்தான் ராய் இறந்ததாக புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தென் மண்டல காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தியதோடு, 8 காவல் துறை அலுவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு குற்றப்புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைக்கப்படும் என காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details