புதுச்சேரி:புதுவையில் அதிகபட்சமாக 160 ரூபாய் அளவிற்குத் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் உள்ளது. குறிப்பாக 3d திரைப்படங்கள் வெளியிடப்பட்டால், கூடுதலாக 30 ரூபாய் என்று 190 ரூபாய் டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோன்று ஆன்லைன் என்ற முறையில் சுமார் 200 ரூபாய் அளவுக்கு அதிகபட்சமாக டிக்கெட் விலை இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதுபோன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் அந்த முன்னணி நடிகரின் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி அரசாங்கம், பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் அன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குத் திரையரங்குகளின் டிக்கெட்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அதிகபட்சமாக பாக்ஸ் 260 ரூபாய், பால்கனி 250 ரூபாய், முதல் வகுப்பு 200 ரூபாய், இரண்டாம் வகுப்பு 175 ரூபாய், மூன்றாம் வகுப்பு 150 ரூபாய் என்று டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.