தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசம்: மாணவன் சுட்டுக் கொலை! - மாணவர் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மாணவர் சுட்டுக் கொலை
மாணவர் சுட்டுக் கொலை

By

Published : Nov 25, 2022, 7:20 AM IST

உத்தரப்பிரதேசம்: பிஜ்னூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரண்டு நபர்களால் பிபிஏ படிக்கும் மாணவன் ஷமிக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கிருஷ்ணா கல்லூரி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சியை போலீசார் வியாழக்கிழமை (நவ. 24) வெளியிட்டனர். சிசிடிவியில், சுடப்பட்ட பிறகும் அந்த மாணவன் சாலையில் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

கிருஷ்ணா கல்லூரி பிபிஏ முதலாம் ஆண்டு மாணவன் ஷமிக், தனது வகுப்புத் தோழி ஹிஜ்பாவுடன் புதன்கிழமை (நவ. 23) வீட்டிற்குச் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை கல்லூரியிலிருந்து சிறிது தூரத்தில் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாணவர் சுட்டுக் கொலை

மாணவனின் குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில் யாஷ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி பிரவீன் ரஞ்சன் சிங் தெரிவித்தார். இது தவிர குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:கண்டெய்னரில் குங்குமப்பூ சாகுபடி! கலக்கும் புனே இளைஞர்..

ABOUT THE AUTHOR

...view details