டெல்லி: இந்திய அரசின் 2022-2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் இறுதியாக இந்த ‘பேட்டரி மாற்றம்’ கொள்கையை அறிவித்தார். இதன் மூலம் நகரங்கள் தோறும் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான சார்ஜ் செய்ய சிறப்பு இயக்க மண்டலங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவரது உரையில், “ மக்கள் பயன்படுத்தும் பொது வாகனங்களில் பேட்டரி ரகங்களை கொண்டு வரவும், எலக்ட்ரானிக் வாகன உபயோகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் இதன் மூலம் எரி பொருள் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கவும், வாகன நெரிசலை தவிர்க்கவும் உறுதிசெய்யப்படும்” எனக் கூறினார்.