பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதலமைச்சராக பாஜக மூத்தத் தலைவரும், மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவருமான பசவராஜ் சோமப்பா பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பி.எஸ். எடியூரப்பாவின் ராஜினாமாவை தொடர்ந்து பசவராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலில் நீண்ட பாரம்பரியம் கொண்ட பசவராஜ், முன்னாள் முதலமைச்சர் எஸ்ஆர் பொம்மையின் மகன் ஆவார்.
இவர் ஏற்கனவே ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 1960ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த பசவராஜ், சாதரா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.