தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்! - மணிப்பூர் காவல்துறை

மணிப்பூர் மாநிலத்திற்கு தான் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையை காரணம் காட்டி, தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக, டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்!
மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்!

By

Published : Jul 23, 2023, 8:34 AM IST

Updated : Jul 23, 2023, 9:34 AM IST

மணிப்பூர்:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அம்மாநில அரசு, தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்து உள்ளார்.

ஸ்வாதி மாலிவால், ஜூலை 23ஆம் தேதி, மணிப்பூருக்குச் சென்று ஜூலை 30 வரை அங்கேயே இருக்கத் திட்டமிட்டு இருந்தார். அவர் முன்கூட்டியே, தனது வருகை குறித்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே, பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டு உள்ள ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "நான் மணிப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில், அம்மாநில அரசு திடீரென்று எனக்கு அனுமதி மறுத்து உள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு, அதிர்ச்சியாகவும், அபத்தமாகவும் உள்ளது.. பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச, நான் ஏற்கனவே எனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன். ஏன் என்னை நிறுத்த முயற்சிக்க வேண்டும்???" என்று அவர் வினவி உள்ளார்.

மணிப்பூர் அரசின் இணைச் செயலாளர் (உள்துறை) ரெஹானுதீன் சௌத்ரி, மாநில அரசு தனக்கு அனுமதி மறுத்ததைத் தெரிவித்து அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

“மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் 23.07.2023 முதல் 30.07.2023 வரை மணிப்பூருக்கு மேற்கொள்ள இருந்த உத்தேச பயணம் ஒத்திவைக்கப்படலாம்” என்று ஸ்கிரீன் ஷாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, மாலிவால் ஜூலை 23ஆம் தேதி காலை மணிப்பூரை சென்று அடைவேன் என்று ட்வீட் செய்து இருந்தார். வடகிழக்கு மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய கும்பலின் அதிர்ச்சி வீடியோ குறித்து மாலிவால், கடிதத்தில் கவலை தெரிவித்து இருந்தார். மணிப்பூர் சம்பவம் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே, தேசிய மகளிர் ஆணையத்திற்கு (NCW) தெரியும், அந்த குழுவின் சார்பில் யாரும் அங்கு செல்லவில்லை என்றும், அவர்கள் இதுதொடர்பாக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, 100 FIRகள் உள்ளன என்று அம்மாநில முதலமைச்சரே கூறி இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது, தான் நிச்சயம் மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக, மாலிவால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, மணிப்பூர் டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ள மாலிவால் ஜூலை 23ம் தேதிக்குள் இம்பாலை சென்றடைவதாகவும், டிஜிபி அலுவலகத்தில் இருந்து ஆதரவு கோருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். . “இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, ஊர்வலமாக, அழைத்து செல்லப்பட்ட வைரல் வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைந்தேன். 2.5 மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் இந்த கொடூரமான குற்றம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை மணிப்பூர் காவல்துறையால் ஒருவரைக் கூட கைது செய்யவில்லை" என்று மாலிவால், அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் வீடியோ வைரலானது தொடர்பாக வியாழக்கிழமை (ஜூலை 20ஆம் தேதி), மணிப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள்,11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்த மறுநாள், அதாவது மே 4ஆம் தேதி, இந்தகொடூர சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் புதிய சாதனை!

Last Updated : Jul 23, 2023, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details