மங்களூரு: ஊறுகாய் என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது, எலுமிச்சை, மாங்காய், தக்காளி, பூண்டு உள்ளிட்டவைதான். தற்போது சில காய்கறிகளிலும் ஊறுகாய் தயாரிக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் புதிய முயற்சியாக தேங்காய் ஊறுகாய் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
அம்மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தென்னையிலிருந்து ஒரு மதிப்புகூட்டு பொருளாக ஊறுகாயை தயாரிக்கின்றனர்.