டெல்லி: மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே.காரத், "கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 96 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2020-21ஆம் ஆண்டுடன் தள்ளுபடி செய்யப்பட்டதை விட குறைவு.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டு முதல் 2021-22ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் 9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 306 ஆக இருந்தது.