பெங்களூரு:கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் யல்லாபூர் நகரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்த குமார் போனலா என்பவர் வங்கிப் பணம் ரூ. 2.69 கோடியை அவரது மனைவியின் கணக்கிற்கு மாற்றிவிட்டு தலைமறைவானதாகவும், அந்த கணக்கில் இப்போது 1 ரூபாய் கூட இல்லை என்றும் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை வங்கி மேலாளர் அளித்தார்.
இதுகுறித்து யல்லாபூர் போலீசார் தரப்பில், "ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் போனலா, யல்லாபூர் நகரில் உள்ள தனியார் வங்கியில் 5 மாதங்களுக்கு முன்பு உதவி மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போதிலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி வரை, தனது மனைவி ரேவதி கோர் வங்கி கணக்கிற்கு படிப்படியாக பணம் அனுப்பி வந்துள்ளார். அப்படி சுமார் 2.69 கோடி வரை வங்கியின் பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பின் வங்கிக்கு வராமல் தலைமறைவாகி உள்ளார். சந்தேகமடைந்த வங்கி மேலாளர் வங்கியின் வரவு செலவுகளை சரிபார்த்தபோது பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.