இந்தூர் (மத்தியப் பிரதேசம்): மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் வளா்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் வங்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிாிழந்தனர் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோரின் கஜ்ரானா காவல் நிலையப் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி காவலர் ராஜ்பால் யாதவ் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறியுள்ளது பின் ராஜ்பால் யாதவ் வீட்டிற்கு சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்து சரமாாியாக சுட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தில் விமல் மற்றும் ராகுல் ஆகியோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினரால் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளனர்.