ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டுவந்த தனியார் பள்ளியில் 4.5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பள்ளி தலைமையாசிரியரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், தெலங்கானா கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, "பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
தெலங்கானாவில் பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து - தெலங்கானா பள்ளியில் பாலியல் தொல்லை
தெலங்கானாவின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகளை வழங்க விரைவில் குழு அமைக்கப்படும். பெற்றோர் துளியும் பயப்பட வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது வழக்குப்பதிவு