தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல்முறையாக புதிய போயிங் ரக விமானத்தில் பயணம்செய்த மோடி - புதிய ரக போயிங்-777 ஏர் இந்தியா விமானம்

புதிய ஏர் இந்தியா விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.

Boeing 777
Boeing 777

By

Published : Mar 26, 2021, 2:57 PM IST

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம்செய்ய புதிய ரக போயிங்-777 ஏர் இந்தியா விமானம் அண்மையில் வாங்கப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து 15 மணிநேரம் இடைவிடாத பயணம் மேற்கொண்ட இந்த விமானம், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஏர் இந்தியா விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். கோவிட்-19க்குப் பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

விமானத்தின் சிறப்பம்சங்கள்

முன்பிருந்த போயிங் ரக விமானம், முழு எரிபொருள் திறனுடன் 10 மணிநேரம் பயணம் செய்யவல்லது. ஆனால், இந்தப் புதிய ரக விமானம், இடைவிடாது 17 மணிநேரம் பயணம் செய்யும் திறன்கொண்டுள்ளது.

மேலும், பாதுகாப்புத் திறன் மேம்பாடுகளும் இந்தப் புதிய விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஏவுகணைகள் விமானத்தைத் தாக்கும்பட்சத்தில், அதனை முன்கூட்டியே அறிந்து, தடுத்துநிறுத்தும் திறனையும் இந்தப் புதிய ரக விமானம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:தீவிர அரசியலுக்கு முழுக்குப் போடுகிறாரா ஏ.கே. ஆண்டனி?

ABOUT THE AUTHOR

...view details