டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்தவர், அபித் ஆசாத். இவரது மூன்று மாத பெண் குழந்தைக்கு "ஜெயன்ட் ஆக்ஸிபிடல் என்செபலோசெல்" என்ற அரிய வகை பிறவி நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகையான நோய் பாதித்தவர்களின் நரம்பு மண்டலம், சீரான வகையில் இல்லாமல், மூளைப் பகுதி மற்றும் மண்டை ஓடு சராசரி அளவைக் காட்டிலும் பெரிதாகவும் கட்டி போன்று வளர்ந்தும் காணப்படும் எனக் கூறப்படுகிறது.
இது பிறவி நோய் என்றும்; நோய்ப் பாதித்தவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் சீரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கட்டி உடைந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.