டெல்லி:1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக வழிவகுத்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன், பிரதமர் மோடி இன்று உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இந்தியா தொடர்ந்து முயற்சித்துவருகிறது. இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தனது முன்னுரிமையை வங்கதேசத்திற்கு வழங்கிவருகிறேன்.