டெல்லி: "லேயர் ஷாட்" எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம், ஆபாசமான இரட்டை அர்த்தங்கள் கொண்ட விளம்பரம் ஒன்றை தயாரித்து, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் நல ஆணையம் வலியுறுத்தியிருந்தது. இந்த விளம்பரம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையையும், ஆண்களிடையே வன்புணர்வு மனநிலையையும் தூண்டும் வகையில் உள்ளது என்றும், இதனை தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லி பெண்கள் நல ஆணையம் வலியுறுத்தியிருந்தது.