டெல்லி: மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ(CBI) வெள்ளிக்கிழமையன்று ரயில்வே ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளது. 291 உயிர்களைப் பலி கொண்ட பாலாசோர் ரயில் விபத்தின் காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருண் குமார் மகந்தா, அமிர்கான் (Junior section engineer) மற்றும் பப்பு குமார் ஆகிய மூவர் தான் கைதானவர்கள் ஆவர். இவர்கள் மீது ஐ.பி.சி. 304-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை அல்லாத பெரும் எண்ணிக்கையில் மரணம் விளைவித்தல் என்ற பொருளை இந்த சட்டப்பிரிவு குறிக்கிறது.
மேலும், ஜூன் 6 அன்று ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. ஜூன் 2 அன்று இரண்டு பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் சம்பந்தப்பட்ட விபத்தில் 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே நேரத்தில் சரக்குகள் மற்றும் பயணிகள் ரயில்கள் பரபரப்பான பாதையில் சென்றன.
இந்த சம்பவம் காங்கிரஸ் மற்றும் பாஜக பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், "பிரதமர் வந்தே பாரத் ரயில் திறப்பு விழாவில் பிஸியாக இருப்பதால் பாலசோர் ரயில் விபத்து "நாசவேலை திட்டத்தால்" ஏற்பட்டது என்று கூறியிருந்தார். பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதற்கு "தவறான சிக்னல்" முக்கிய காரணம் என்று உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பின்னர் இந்த விசாரணையின் கருத்துக்கள் வெளி வந்தது அப்போது ரயில் விபத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் "பல நிலைகளில் குறைபாடுகள்" உள்ளன எனவும் கூறினார்கள் ஆதலால் ரயில் விபத்து ஏற்ப்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்று சுட்டிக்காட்டினார். மேலும், பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பதற்கு பிரதமரும் ரயில்வே அமைச்சரும் முன்வைத்த நாசவேலை கோட்பாடு என்பது தெளிவாகிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான 'கவாச்' இல்லை என்பது பேசுபொருளாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க விபத்து தொடர்பாக ரயில்வே பொறியாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ள சிபிஐ அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி? - யார் யாரெல்லாம் தகுதியுடைவர்கள்?