ஜெய்ப்பூர் :சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அல்வார் மக்களவை தொகுதி எம்.பி. மகந்த் பாலக்நாத்தின் பெயர் முதலமைச்சர் வேட்பாளர் ரேசில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில், இன்று (டிச. 3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜகவுக்கு ஏறுமுகமாக காணப்படுகிறது. 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக ஏறத்தாழ ஆட்சியை அமைக்கும் சூழலில் உள்ளது.
இதையடுத்து பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு குறித்து மும்முரம் அடைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஓட்டத்தில் உள்ளனர். அதேநேரம், ஆல்வார் மக்களவை தொகுதி யோகி மகந்த் பாலக்நாத் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் உள்ளார்.