தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாலில் புகுந்து பதான் பட பேனரை கிழித்த 'பஜ்ரங் தள்' அமைப்பினர் - Besharam Rang issue

அகமதாபாத்தில் உள்ள ஒரு மாலில், பதான் பட போஸ்டரை பஜ்ரங் தள் அமைப்பினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதான் பட போஸ்டரை கிழித்த பஜ்ரங் தள அமைப்பினர்!
பதான் பட போஸ்டரை கிழித்த பஜ்ரங் தள அமைப்பினர்!

By

Published : Jan 5, 2023, 12:54 PM IST

அகமதாபாத்: இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்படப் பலர் நடித்த படம் பதான்(pathaan). இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் ‘பேஷாராம் ரங்’ என்ற பாடலில் தீபிகா படுகோனே பலகவர்ச்சியாக பிகினி உடையில் நடனமாடி இருந்தார். அதிலும் காவி நிற பிகினியில் பலகவர்ச்சியாக அமைந்த இந்த பாடல் சர்ச்சையானது.

காவி நிற பிகினியில் கவர்ச்சியாக அமைந்த பாடலுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் குழந்தைகள் நல அமைப்பு, படத்தில் இடம் பெற்றுள்ள ‘பேஷ்ராம் ரங்’ பாடல் உள்பட மற்ற ஆபாசமான காட்சிகளை நீக்குமாறு காவல் துறையில் புகார் அளித்தது.

இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள வஸ்திராபூரில் இயங்கும் தனியார் மாலில் பதான் படத்தின் போஸ்டர்கள் இருந்துள்ளது. இதனையடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அங்கங்களில் ஒன்றான பஜ்ரங் தள அமைப்பினர் சிலர், தனியார் மாலில் இருந்த பதான் பட போஸ்டரை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மாலின் வெளியே வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் ஹிதேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், “திரையரங்கில் பதான் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பஜ்ரங் தள தொண்டர்களுக்கு தெரிய வந்தது. எனவே திரையரங்குகளில் படத்தை வெளியிடக் கூடாது என ஆர்ப்பாட்டம் நடந்ததால், காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக வஸ்திராபூர் காவல் ஆய்வாளர் ஜே.கே.டங்கர் கூறுகையில், “பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சுமார் 10 முதல் 12 பேர் வஸ்திராபூரில் உள்ள ஆல்பா ஒன் மால் தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பதான் படத்தின் போஸ்டர்களை கிழித்து எட்டி உதைத்து, அடித்தனர். அதன்பிறகு வெளியில் வந்து படத்தை வெளியிடக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்களில் 5 முதல் 6 பேரை நாங்கள் தடுத்து நிறுத்தி, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்தோம். திரையரங்கம் சார்பில் எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை” என தெரிவித்தார். இதனிடையே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் பதான் திரைப்படம் ஜன.25ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:கேரள நெய்யப்பம் 'கல்யாணி பிரியதர்ஷனின்' கண்கவர் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details