உத்ரகாண்ட்: உலகப் புகழ்பெற்ற கேதார்நாத்தில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கௌரிகுண்ட் அருகே கேதார்நாத் செல்லும் சாலைகளில் பாறைகள் உருண்டு பயணம் தடைபட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர்.இதுமட்டுமல்லாமல், பஞ்சபுலியா அருகே மலையில் இருந்து பாறைகள் சரிந்ததால், பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பத்ரிநாத் யாத்திரையும் தற்காலிகமாக தடைபடவே, அப்பகுதி அரசு ஊழியர்களின் 2 மணி நேர தொடர் முயற்சிக்குப் பின், பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டு, யாத்திரை தொடர்ந்தது. எனினும், இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
தினமும் நண்பகலுக்குப் பிறகு கேதார்நாத்தில் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக கேதார்நாத் யாத்திரை நடைபாதை கௌரிகுண்ட் அருகே இடிந்து விழுந்தது. இதனால் காலை யாத்திரை தொடங்க முடியாமல் கெளரிகுண்டில் பல மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது.