தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

9 வயது சிறுமியின் வயிற்றில் சிசு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள்

ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் பிறந்தது முதலே உயிரற்று இருந்த சிசுவை மும்பை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

சோனோகிராபி
சோனோகிராபி

By

Published : Nov 30, 2021, 6:44 PM IST

மும்பை: ரோஷ்னி கியாசுதீன் அன்சாரி எனும் ஒன்பது வயது சிறுமி, உத்தரப் பிரதேசம், குஷிநகரில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அச்சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது வயிற்றில் கட்டி இருப்பதாகக் கருதிய அவரது குடும்பத்தார், மூடப்பழக்கவழக்கங்களை நம்பி சாமியார் ஒருவரை அணுகி பரிகாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் சிறுமியின் வயது ஏற ஏற அவரது பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது

இந்நிலையில், இறுதியாக சிறுமியை மும்பை, சியோன் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சோனோகிராபி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறுமியின் வயிற்றை சோதனையிட்டபோது அவரது வயிற்றில் இருந்தது கட்டி அல்ல என்றும், அது ஒரு உயிரற்ற நிலையில் இருந்த சிசு என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சிறுமி பிறந்தது முதலே அவரது வயிற்றில் அச்சிசு இருந்ததாகவும், இரண்டு கருக்கள் உருவாகும் தருணங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, சியோன் மருத்துவமனை

இந்நிலையில், சியோன் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு ரோஷ்னியின் வயிற்றில் இருந்து இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:டெல்டா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவிஷீல்டு - சர்வதேச ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details