தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை! - Baby born with two heads

புவனேஷ்வர்: ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் ஒரு குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

conjoined twins
conjoined twins

By

Published : Apr 11, 2021, 7:38 PM IST

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் டெபாஷிஷ் சாஹூ கூறுகையில், "அந்த இரட்டை குழந்தை அரிதான பிறவி, மருத்துவ குறைபாட்டுடன் பிறந்துள்ளன. மார்பு, வயிறு ஆகியவை இணைந்து பிறந்துள்ளது. தற்போது, அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சோனாகிராம் ஸ்கேன் எடுத்த பின்பு, பிற விவரங்கள் தெரியவரும். இதேபோல், கட்டாக் பகுதியில் ஒரு குழந்தை பிறந்துள்ளது" என்றார்.

கரு சரியாக வளர்ச்சி அடையாத காரணத்தால் இம்மாதிரியான குழந்தை பிறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details