ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுசிவேடு பகுதியில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவருக்கு மூன்று கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, நுசிவேடு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நரேந்திர சிங் கூறுகையில், குழந்தை, தாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள்மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.