தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடுவானில் பிறந்த பெண் குழந்தை- மருத்துவருக்கு குவியும் பாராட்டு!

பெங்களூருவிலிருந்து, ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் நடுவானிலேயே மருத்துவர் உதவியோடு ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

நடுவானில் பிறந்த பெண் குழந்தை
நடுவானில் பிறந்த பெண் குழந்தை

By

Published : Mar 17, 2021, 8:51 PM IST

பெங்களூருவிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று(மார்ச்.17) காலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, அதில் பயணித்த பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து விமானத்திலிருந்த கேபின் குழு ஊழியர்களிடம், அப்பெண் உதவி கோரினார். அச்சமயம் அதிர்ஷ்டவசமாக அவ்விமானத்தில் மருத்துவர் சுபகானா நசீர் பயணித்தார்.

உடனே அப்பெண்ணுக்கு,கேபின் குழு ஊழியர்களின் உதவியோடு மருத்துவர் பிரசவம் பார்த்தார். இதில் அப்பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், “பெங்களுருவிலிருது, ஜெய்ப்பூருக்குச் சென்று விமானத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளார். தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த மருத்துவருக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து இறங்கியதும் மருத்துவருக்கும், விமான பணிப்பெண்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details