இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுக்கு உள்ளான ஒரு பட்டதாரி இளைஞன் தன்னிடமிருந்து குடும்பத்தினருக்கு தொற்று பரவாமல் தடுக்க, அவர் உருவாக்கிய தனியறை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோத்தா நந்திகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாவத் சிவா. இவர் ஒரு பி.டெக் மாணவர். கரோனா பரிசோதனையில் சிவாவிற்கு தொற்று உறுதியான நிலையில், இவர் தனது வீட்டின் முன் உள்ள மரத்தை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையாக உருமாற்றியுள்ளார்.
மரத்தை தனிமைப்படுத்தும் அறையாக உருமாற்றிய பி.டெக் மாணவர் இந்நிலையில், தனது குடும்பத்தினருக்கு தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்ற யோசனையில், மரத்தின் மேல் கட்டில் அமைத்து பாதுக்காப்பான முறையில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார் சிவா. மேலும், மரத்தின் கீழிருந்தே கயிறு மூலம் குடிநீர், உணவு போன்றவைகளை பெற்றுக்கொள்ளும்படியும் அவர் வழி செய்துள்ளார்.
இந்தியாவில் குறிப்பாக கிராமத்தில் வீடுகள் நெருக்கம் மிகுந்தவை என்பதாலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது கடினமானது என்பதாலும் மாணவர் ராமாவத் சிவாவின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமரும், பிரதமர் நிதியில் தயாராகும் வென்டிலெட்டரும் தங்கள் வேலையை செய்வதில்லை : ராகுல்