தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எடியூரப்பா குற்றவியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்! - b s yediyurappa case

முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்ய மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பி.எஸ்.எடியூரப்பா குற்றவியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்!
பி.எஸ்.எடியூரப்பா குற்றவியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

By

Published : Jul 22, 2022, 9:51 PM IST

புதுடெல்லி: கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டில் பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வாசுதேவ் ரெட்டி தாக்கல் செய்த தனிப்பட்ட புகாரின் மீது, லோக் ஆயுக்தா காவல்துறையின் விசாரணைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய விசாரணையை ரத்து செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து எடியூரப்பா தாக்கல் செய்த சிறப்பு மனு மீது கர்நாடக அரசுக்கு தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அமர்வு நோட்டீஸ் அனுப்பியதுடன், உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கின்போது கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், “அக்டோபர் 9, 2015 அன்று முதல் குற்றவாளிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அதே எஃப்ஐஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த பின்னணியில், அதே எஃப்ஐஆர் மீது முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான விசாரணை சட்ட விரோதமானது.

லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய விசாரணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் உடனடி விசாரணை நடத்துவதில் மெத்தனம் காட்டப்படுகிறது. குற்றவியல் நீதிமன்றங்கள் உத்தரவிட்ட விசாரணையை, லோக் ஆயுக்தா நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியது” என வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை மீதான சிபிஐ விசாரணை - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details