அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கட்டுமானம் குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த ஷேத்ரா அறக்கடளை பொது செயலாளர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் சரியான பாதையில் செல்கிறது.
கோயில் அடித்தளத்தின் முதற்கட்டப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பருக்குள் நிறைவுபெறும். கான்கிரீட் தொடர்பான பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. காலை நேரத்தில் வெப்பம் அதிகம் காணப்படுவதால் இரவு நேரத்தில் கான்கிரீட் பணிகள் செய்யப்படுகின்றன.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் திறக்கப்படும் என்றார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கோயில் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் கோயில் திறக்கப்படுவது பாஜகவுக்கு தேர்தலில் நேரடி பலனைத் தரும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சிறையிலிருக்கும் ஆர்யன் கானுக்கு ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பிய குடும்பம்