தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் புகார் விவகாரம்.. பிரிஜ் பூஷன் சிங் பேரணிக்கு உ.பி. அரசு அனுமதி மறுப்பு! - பிரிஜ் பூஷன் சிங் பேரணிக்கு அனுமதி மறுப்பு

பாலியல் புகார் விவாகரத்தில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங், வரும் 5ஆம் தேதி பேரணி நடத்த இருந்த நிலையில் அதற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து உள்ளது.

Brij Bhushan singh
Brij Bhushan singh

By

Published : Jun 2, 2023, 4:02 PM IST

அயோத்தி : மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்த நிலையில், ஜூன் 5ஆம் தேதி நடத்த இருந்த பேரணிக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி மறுத்து உள்ளது.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள், குழுக்கள் உள்ளிட்டோரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சிங் மீது, இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி போலீசார் பதிவு செய்து உள்ளனர். பிரஜ் பூஷன் சரண் சிங்கி மீது 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள 10 புகார்களும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக மார்பு உள்ளிட்ட பகுதிகளை தொடுதல் போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் உள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட, வீராங்கனைகளை தனியாக அழைத்து மிகவும் மோசமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பிரிஜ் பூஷன் சிங் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும், புகார் அளித்தவர்களில் ஒருவர் மட்டும் 18 வயதிற்கு குறைந்த மைனர் என்று கூறப்பட்டு உள்ளது. அந்த மைனர் பெண் சார்பாக அவரது தந்தை புகார் கொடுத்து உள்ளார் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த இரண்டு முதல் தகவல் அறிக்கையின் படி பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 5ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி நடக்க இருந்த பிரிஜ் பூஷன் சிங் பேரணிக்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து உள்ளது. அன்றைய நாள் உலக சுற்றுச்சூழல் தினம் என்பதாலும், பல்வேறு நிகழ்ச்சிகள் அந்த நாளில் திட்டமிடப்பட்டு உள்ளதாலும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, ஜூன் 5ஆம் தேதி திட்டமிடப்பட்டு இருந்த ஜன் சேத்ன மகாரேலி, சில நாட்கள் கழித்து திட்டமிட்டபடி நடக்கும் என பிரிஜ் பூஷ்ன் சிங் தனது முகநூல் புத்தகத்தில் பதிவிட்டு உள்ளார். கைசர்கஞ்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூஷன் சிங் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!

ABOUT THE AUTHOR

...view details