காலநிலை மாற்றத்தின் பின்விளைவுகளாக இயற்கைப் பேரழிவுகளையும், சுற்றுச்சூழலில் மாறுபாட்டையும் நாம் நாள்தோறும் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும் நிலைத்தன்மை (இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பது) தேவைப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் மனிதர்கள் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தும் முறை எதிர்காலத்தில் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனையடுத்தே இன்று (ஆக. 10) உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் எரிபொருளுக்கு மாற்றாக அமையும் இந்த உயிரி எரிபொருள் குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதற்காகவே இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த சார் ருடோல்ஃப் டீசலின் நினைவாக இன்று உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சார் டீசல் 1893ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று மெக்கானிக்கல் இன்ஜினை கடலை எண்ணெய்யை வைத்து வெற்றிகரமாக இயக்கினார்.