டெல்லி: 75ஆவது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை பிரமாண்டமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
இந்த நிலையில், சுதந்திர தினக்கொண்டாட்டங்களில் அதிகளவு கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் சராசரியாக நாள்தோறும் 15 ஆயிரம் கரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், கரோனா கட்டுப்பாடுகளைப்பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், அதனால் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டங்கள்தோறும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணி!