கரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் குறைந்திருந்த காற்று மாசு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காற்று மாசை குறைக்கவும் இது குறித்து மக்களிடையே தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், இன்னும் சில நாள்களில் திபாவளி பண்டிக்கை வரவுள்ளது. அப்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பட்டாசுகளுக்கு எதிரான பரப்புரையை டெல்லி அரசு தற்போது தொடங்கியுள்ளது.
இந்தப் பரப்புரையை தொடங்கி வைத்த டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், "பசுமை பட்டாசுகளை மட்டுமே டெல்லியில் விற்க வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பதை டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியும் உறுதி செய்யும்.