கொச்சி : கேரளாவின் கொச்சியிலுள்ள கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழாவில் மாநிலத்தின் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கலந்துகொண்டார்.
விழாவில் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் தனது கையால் 386 மாணவ- மாணவியருக்கு பட்டம் அளித்தார். இந்த விழாவில் மாணவர்கள் வரதட்சணைக்கு எதிரான பரப்புரையை முன்னெடுத்தனர்.
இதை வெகுவாக பாராட்டிய ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், “மாநிலத்தில் உள்ள நகைக் கடை விளம்பரங்களில் பெண்கள் கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து கொண்டு காட்சியளிக்கும் புகைப்படங்களை தவிருங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.