கர்நாடகா: ராய்ச்சூரில் அமைந்திருக்கும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்ற கீதிகா என்னும் மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவரது தந்தை சுரேஷ் ஆட்டோ ஓட்டுனர் ஆவார்.
மாணவி கீதிகா கேரளா மாநிலம் மலப்புரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கீதிகாவுடன் சேர்த்து தங்கப் பதக்கம் வென்ற அனைவருக்கும் கர்நாடகா ஆளுநர் தவார்சந்த் கெலோத் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இது குறித்து கீதிகா ETV பாரத்திடம் பேசுகையில், “தங்கப் பதக்கம் வென்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நான், கேரளாவிலிருந்து வந்திருந்தாலும் கர்நாடகாவில் ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்தனர். எனது வெற்றிக்கு துணையாக இருந்த என் பெற்றோருக்கு கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறினார்.
மேலும் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவது தனது லட்சியம் எனக் கீதிகா தெரிவித்தார். தங்கப் பதக்கம் வென்ற வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் இந்தியர்: யார் இந்த பராக் அகர்வால்?