தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாட்டரியில் ரூ. 25 கோடி... வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த யோகம்... - Auto driver got lottery price

கேரளாவில் வெளிநாடு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் - லாட்டரி கொடுத்த ஷாக்
வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் - லாட்டரி கொடுத்த ஷாக்

By

Published : Sep 19, 2022, 7:10 AM IST

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீவராஹம் பகுதியை சேர்ந்தவர், அனூப். இவர் கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இவற்றில் ரூ.100 முதல் ரூ.5,000 வரை மட்டுமே இவருக்கு பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (செப் 9) அன்று ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளார். அந்த பம்பர் லாட்டரி எண்ணிற்கு 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து அனூப் கூறுகையில், “நான் பெற்ற கடன் தொடர்பாக இன்றுதான் என்னை வங்கிக்கு வரச் சொன்னார்கள்.

நான் வங்கிக்கு செல்வதற்குள் எனக்கு 25 கோடி ரூபாய் லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது. முன்னதாக நான் மலேசியாவில் ஹோட்டல் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இனி அது எனக்கு தேவை இல்லை. இந்த பணத்தை வைத்து வீடு கட்டுவேன். எனது கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவேன். புதிதாக ஹோட்டல் ஒன்று தொடங்குவேன்” என்றார். அனூப் வெற்றி பெற்ற லாட்டரி சீட்டின் மூலம் வரிப்பிடித்தம் போக ரூ.15 கோடி அவருக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க:வீட்டை விற்று ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியில் ரூ.18 லட்சத்தை இழந்தவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details