தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிட்னியில் மே மாதம் குவாட் உச்சி மாநாடு - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு! - குவாட் உறுப்பினர்கள்

2023 ஆம் ஆண்டுக்கான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி அல்பென்சி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

Quad
Quad

By

Published : Apr 26, 2023, 7:29 AM IST

கான்பெரா :2023 ஆண்டுக்கான குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு மே மாதம் 24 ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பென்சி தெரிவித்து உள்ளார். பசிபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குவாட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எல்லைப் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள், வர்த்தகம், பொருளாதாரம், போர் பயிற்சி, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பேணுவதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் முதலில் கடற்படை போர் பயிற்சியில் மட்டுமே நாடுகள் ஈடுபட்ட வந்தன. மலபார் போர் பயிற்சி என்ற பெயரில் 4 நாடுகளும் முதலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.

நாளடைவில் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி துறை, பிராந்திய வளர்ச்சி சார்ந்த செயல்களில் இந்த அமைப்பு ஈடுபடத் தொடங்கியது. கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பென்சி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் முடிவில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான குவாட் உச்சி மாநாட்டை முதல் முறையாக ஆஸ்திரேலியா நடத்துகிறது.

மே மாதம் 24 ஆம் தேதி சிட்னி நகரில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பென்சி வெள்யிட்டு உள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "மே 24 ஆம் தேதி சிட்னியில் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டை ஆஸ்திரேலியா முதல் முறையாக நடத்துகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டு உள்ளார்.

மே மாதம் ஆஸ்திரேலியா வரும் பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அந்தோனி அல்பென்சி தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 4 நாட்கள் பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பென்சி இந்தியா வந்த போது, பிரதமர் மோடி குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க :வழிப்பறியில் இறங்கிய பாடி பில்டர் - கர்நாடகாவில் பிடிபட்டது எப்படி?!

ABOUT THE AUTHOR

...view details