தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி! ஆஸ்திரேலியா திட்டவட்டம்! - ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்

ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானிசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

PM Modi
PM Modi

By

Published : May 24, 2023, 4:31 PM IST

டெல்லி : ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்திர உறுப்பினராக அங்கம் வகிக்க ஆஸ்திரேலியா ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஆந்தோனி அல்பானிஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி, அங்குள்ள சிட்னி நகருக்கு சென்றார். பிரதமர் மோடியை "பாஸ்" என்று அழைத்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் வரவேற்பு அளித்தார். சிட்னி நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் முன்னிலை பிரதமர் மோடி உரையாற்றினார். தனியார் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை காண ஏறத்தாழ 21 ஆயிரம் பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடினார்.

இதனிடையே பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோர் தலமையிலான பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வலுவான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இரு நாட்டு மக்களிடையேயான உறவை வலுப்படுத்த தூதரக ரீத்யிலான முயற்சிகள், எரிசக்தி, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாதுகாப்பு, பிராந்திய ஒற்றுமை, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தது, போர் பயிற்சி, தளவாட ஒப்பந்தம், விவசாயம் மற்றும் மென்பொருள் துறைகளில் முன்னேற்றம் காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில் ஒருங்கிணைப்பு, முன்கூட்டியே முடிய உள்ள விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த பகிர்வுகளை புதுப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொழில், கடல் வழி போக்குவரத்து உள்ளிட்டவற்றில் சீனாவுக்கு எதிரான சக்தியாக உருவெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து வரும் ஜூலை மாதம் ஆலோசனை நடத்த இந்த சந்திப்பின் போது திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் அவமதிக்கப்பட்டது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசிடம், பிரதமர் மோடி பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்திர உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார்.இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் வினய் குவாத்ரா, ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தின் போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இந்தியா பதவியேற்க ஆஸ்திரேலிய அதன் ஆதரவை அளிக்கும் என்றார்.

தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் செயல்படவில்லை என்ற அதிருப்தி பல்வேறு நாடுகளிடையே நிலவுவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்க பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெளியுறவு கொள்கையில் இந்தியாவின் நிலைப்பாடு, உலக நாடுகளுடன் இந்தியா நட்பு பாராட்டும் குணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :Rahul Gandhi: "ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது" - சுப்பிரமணிய சுவாமி!

ABOUT THE AUTHOR

...view details