தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2022, 10:17 PM IST

Updated : Aug 17, 2022, 10:49 PM IST

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் உலர் பேரிச்சம்பழம் விளைச்சல் பாதிப்பு.. இந்தியாவில் விலை மேலும் உயர வாய்ப்பு..

உலர் பேரிச்சம்பழம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால், விற்பனையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலர் பேரிச்சம்பழ உற்பத்தி பாதிப்பு.. வியாபாரிகள் வேதனை
உலர் பேரிச்சம்பழ உற்பத்தி பாதிப்பு.. வியாபாரிகள் வேதனை

அவுரங்காபாத் (மகாராஷ்டிரா): இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருட்களில் ஒன்று, உலர் பேரிச்சம்பழம். இதன் உற்பத்திக்கு தகுந்த காலநிலை பாகிஸ்தானில் உள்ளது. இவற்றில் 1,75,000 ஆயிரம் டன்கள் அதாவது 17,000 டிரக்குகள் அளவுள்ள உலர் பேரிச்சம்பழம், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதில், மகாராஷ்டிராவில் சுமார் 20,000 முதல் 25,000 டன்கள் அளவிலான உலர் பேரிச்சம்பழம் விற்பனையாகிறது. ஆனால், இந்த ஆண்டு பெய்து வரும் கனமழையால் உலர் பேரிச்சம் பழத்தின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து உலர் பேரிச்சம்பழ வியாபாரியான சிவநாராயண் டோட்லா கூறுகையில், “மாநிலத்தில் (மகாராஷ்டிரா) அதிக அளவு உலர் பேரிச்சம்பழங்கள் பாகிஸ்தானில் இருந்து வருகின்றன. ஆனால் அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 50 சதவீத பயிர்கள் சேதமடைந்துள்ளது.

இதனால் இதன் விலை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து இங்கு விற்பனைக்கு வருகின்றன. மீதமுள்ளவை மஸ்கட் மற்றும் ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்ட சேதத்தால் வருமானம் 80% குறைந்துள்ளது.

பருவமழை மற்றும் குளிர்காலங்களில் உலர் பேரிச்சம்பழம் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால் அதன் தேவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு, அதன் விகிதங்கள் கிட்டத்தட்ட 70% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை கிடைத்த உலர் பேரிச்சம்பழம், இந்த ஆண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை கிடைக்கிறது. மேலும் இந்த ஆண்டு உலர் பேரிச்சம்பழ விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இனி ஜங்க் புட்ஸ் சாப்பிடாதீங்க... அடிக்கடி பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா...? ஆய்வில் தகவல்...!

Last Updated : Aug 17, 2022, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details