1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவாகியது. இந்த தேசப் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரங்களை நினைவுபடுத்தும் விதமாக இனி ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை துயரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவு
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரிவினையின் வலியை ஒருபோதும் மறக்க முடியாது. வெறுப்பு, வன்முறை ஆகியவற்றின் காரணமாக லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் இடம் பெயர்ந்தனர். பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
எனவே, இந்த 'பிரிவினை துயரங்கள் நினைவு தினம்' சமூக வேற்றுமை, மோதல் ஆகியவற்றை நீக்கி ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மனித மேம்பாட்டிற்கு உறுதி சேர்க்கட்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்: இந்திய மூவர்ணத்தில் மிளிர உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலிஃபா!