உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த விஜய் என்பவருக்கு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த வைஷாலி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அரசு விதித்த கரோனா விதிமுறைகளைப் பின்பற்றவே அலட்சியம்காட்டும் மக்கள் மத்தியில், இந்த ஜோடி ஒருபடி மேலே சென்று, திருமண அழைப்பிதழிலேயே கரோனா எதிர்மறைச் சான்றிதழுடன் வாருங்கள் என்பது அச்சிட்ட சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது.
கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க - தம்பதிக்குப் பாராட்டு
டேராடூன்: கரோனா நெகட்டிவ் (எதிர்மறை) சான்றிதழுடன் திருமணத்திற்கு வாருங்கள் என திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா நெகட்டிவ் சான்றிதழ்
இது குறித்து விஜய் கூறுகையில், "கரோனா பரவல் அதிகரிப்பால், நிச்சயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை நன்கு அறிவோம். அதைக் கருத்தில்கொண்டே, திருமண அழைப்பிதழிலேயே கரோனா எதிர்மறைச் சான்றிதழ் வேண்டும் எனக் குறிப்பிட்டோம். அனைத்து நிகழ்ச்சிகளிலும், அரசு அறிவித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியமாகும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது