திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான முரளீதரன் வீட்டில் நேற்றிரவு(பிப்.8) மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் கல்லால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இரவில் தாக்குதல் நடந்தபோது அமைச்சர் வீட்டில் இல்லை எனத் தெரிகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்த போலீசார், தடயவியல் குழுவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக வந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.