ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியைச் சேர்ந்த மாருதி பிரசாத் என்பவரிடம் தேவிலால் கடன் வாங்கியுள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத தேவிலால் மீது கூகட்பள்ளி நீதிமன்றத்தில் பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, இது தொடர்பாக பஞ்சப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேவிலால் தலைமறைவான நிலையில், அவர் பதஞ்சேரு பகுதியில் இருப்பதை அறிந்த பிரசாத் பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
காவலாளி மீது கொடூரத் தாக்குதல் இந்த வழக்கு தொடர்பான நோட்டீஸ் கொடுக்க அவர் வீட்டுக் காவலாளி கனகய்யாவை அங்கு அனுப்பி வைத்தார். நோட்டீஸில் கையெழுத்திட வேண்டும் என்ற கனகய்யாவின் கோரிக்கையை தேவிலால் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென கனகய்யாவைத் தேவிலாலும் அவரது ஆதரவாளர்களும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை செருப்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கனகய்யா காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.