தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமிக்குப்போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - ஹைதராபாத்தில் கொடூரம் - girl

ஹைதராபாத்தில் 13 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! ஹைதராபாத்தில் கொடூரம்
சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! ஹைதராபாத்தில் கொடூரம்

By

Published : Sep 15, 2022, 5:01 PM IST

ஹைதராபாத்: நகரின் பழைய நகரத்தில் உள்ள டபீர்புரா காவல் நிலையப்பகுதியில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. 13 வயது சிறுமிக்கு இரண்டு இளைஞர்கள் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சஞ்சல்குடாவைச் சேர்ந்த மைனர் சிறுமியை அதே பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் காரில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் அந்தச்சிறுமியை நம்பள்ளியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு, அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து இரண்டு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அந்த இருவரும் ஓடியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்தப்புகாரின் பேரில் டபீர்புரா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின் குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குஜராத் கடல் பகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்...!

ABOUT THE AUTHOR

...view details