தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏ.டி.எம். சேவை கட்டணம் உயர்வு - Atm service charge

வரும் ஜனவரி 1ஆம் தேதிமுதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

atm-service-charge-increase
atm-service-charge-increase

By

Published : Dec 7, 2021, 12:15 PM IST

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாநகரங்களில் மூன்று முறை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம்.

மற்றப் பகுதிகளில் ஐந்து முறை பயன்படுத்த கட்டணமில்லை. இந்த வரம்பைத் தாண்டி தங்கள் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களின் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது.

இந்தக் கட்டணம் வரும் ஜனவரி 1ஆம் தேதிமுதல் உயருகிறது. அதன்படி, இலவசப் பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாம்

ABOUT THE AUTHOR

...view details