தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சாப்பிட உணவில்லாமல் வெங்காயம் சாப்பிட்டு எல்லையை கடந்தோம்' ஆந்திர மாணவி - russia vs ukraine

நாளுக்குநாள் நிலைமை மோசமானது. நடந்துசெல்லும் வழியில் சாப்பிட உணவில்லாமல் வெங்காயம் சாப்பிட்டு எல்லையை கடந்தோம் என்று உக்ரைனிலிருந்து திரும்பிய ஆந்திர மாணவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

andhra student
andhra student

By

Published : Feb 28, 2022, 9:03 PM IST

அமராவதி:ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, மத்திய அரசு 'ஆபரேசன் கங்கா' என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டுவருகிறது. இதுவரை 6 விமானங்கள் மூலம் 21 தமிழ் மாணவர்கள், 23 ஆந்திர மாணவர்கள் உள்பட 1,369 மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர்.

நாடு திரும்பிய மாணவர்களில் 23 பேர் தங்களது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சென்றடைந்தனர். அதில் காவ்யாஸ்ரீ என்னும் மாணவி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எங்களை மீட்டதற்கு அரசுக்கு நன்றி. உக்ரைனில் இன்னும் 100க்கும் மேற்பட்ட தெலுங்கு மாணவர்கள் பயந்து ஒளிந்துகொண்டுள்ளனர். அவர்களையும் அரசு விரைவாக மீட்க வேண்டும்.

நாங்கள் உக்ரைன் எல்லையை கடந்து வர நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. வழியில் போதிய உணவில்லாமல் வெங்காயம் சாப்பிட்டு உயிர் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்படியோ எல்லையைத் தாண்டி விமான நிலையத்தை அடைந்து விட்டோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனிடையே இன்டிகோ நிறுவனம் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து ருமேனியாவிற்கும், ஹங்கேரிக்கும் இரண்டு விமானங்கள் இயக்கிவருகிறது.

இதையும் படிங்க:இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்கள் இயக்கப்படும்; இன்டிகோ

ABOUT THE AUTHOR

...view details