டெல்லி:நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 14) டெல்லியில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பாதுகாப்புத் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அதில், டோக்லாம் எல்லையில் இந்திய - சீன படையினரின் மோதல், தேசிய பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதம் நடத்த ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்தார்.