புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்தன. அதில், அதிகபட்சமாக இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு கணித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முதல்நாளின் முதல் குழந்தை தெற்கு பசிபிக் நாடான பிஜியில் பிறந்துள்ளது. முதல் நாளின் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.
அதில், 50 விழுக்காடு குழந்தைகள் குறிப்பிட்ட 10 நாடுகளில் பிறந்துள்ளது. இந்தியாவில் 59,995, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேஷியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறந்துள்ளன. மொத்தமாக, இந்தாண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என யுனிசெப் கணித்துள்ளது. அதன் சராசரி ஆயுள் 84 ஆண்டுகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.