மேஷம்:சில குறிப்பிட்ட காரணத்தால் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கும். அதனால் உங்கள் உடைமை மீது சிறிது பயம் ஏற்படக்கூடும். அன்பால் உறவுகள் மலரும். திருமண வார்த்தை செழிக்கும்.
ரிஷபம்: சிறிய பயணத்தை மேற்கொள்ளலாம். பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். அதனால் மனம் சிறிது வருத்தம் அடையலாம். திட்டங்களை முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுத்துதல் நன்மையை கொடுக்கும். அதனால், குழப்பமின்றி அந்த நாள் அமைய உதவும். பயணத்தின் மாற்றங்கள் நன்மை தரும். அதன் காரணமாக உங்கள் பயணம் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அமையும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்:எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவதுடன், மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்:கற்பனை திறன் அதிகரிக்க கூடும். கருத்துக்கள் சிறந்து விளங்கும். கௌரவம் அதிகரிப்பதுடன், முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். ( முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும்). படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம்.
சிம்மம்: வீட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபடலாம். அதனால் வீட்டில் உள்ள மரச்சாமான்களை மாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கன்னி: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டால், சந்தோஷமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.