மேஷம்: நீங்கள் கற்பனை வளம் மிக்கவர் என்பதால், இன்று அனைவரையும் மகிழச் செய்வீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், நீங்கள் செய்ய முடியும் அளவைவிட, அதிகமான அளவு பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.
ரிஷபம்: நீங்கள் இன்று, பணியில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாகக் நேரத்தை கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்க கூடும். இன்று முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவை சாப்பிடவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.
மிதுனம்: இன்று, சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும் பதற்றமும் ஏற்படும். உங்கள் கவலைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பை பெறுவீர்கள். எங்கள் பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கடகம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பதற்றமும் எரிச்சலான மனநிலையும் இருக்கக்கூடும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நிதானத்தை இழக்காமல் அமைதியாக செயல்படுங்கள். அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கோப உணர்வு இருந்தால், பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாகும்.
சிம்மம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் கருத்தை கேட்டு அறிவீர்கள். அப்போது நீங்கள், ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று, உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
கன்னி: நீங்கள் இன்று அதிக புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களது திறமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த கலைஞராக திகழ்வீர்கள். உங்களது கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் காரணத்தினால், உங்கள் செயல்திறன் அதிகம் இருக்கும். ஆடல் மற்றும் பாடல் கலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். நாடக கலை மற்றும் எழுத்துத் துறையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.